×

நீதிமன்றம் மூலம் பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு பொய்வழக்கு என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது: சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என்மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்க சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.  இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன். இவ்வாறு கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,announcement ,DT.Dinagar , Court, fake case, TTV.Dinakaran
× RELATED புழல் மத்திய சிறையில் செயல்படும்...