×

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் கூஜாவானது’: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு


சிவகாசி:  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ‘‘கஜா புயல் வருவதற்கு முன்னரே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, மின்னல் வேகத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. புயலை எதிர்கொண்டு மக்களை காக்கின்ற அரசாக எடப்பாடி அரசு செயல்பட்டதால், கஜா புயல் கூஜா புயலாக மாறி விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Rajendra Palaji ,government , Gaja storm, Minister Rajendra Palaji
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...