×

கஜாவால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : அமைச்சர் தங்கமணி தகவல்

திருச்செங்கோடு:  நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் சுமார் 11,371 ஆயிரம் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதற்கட்டமாக மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறினார். 3 நாட்களுக்குள்  மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்படும் என்றார். மேலும் பேசிய அவர் புயலால் வீழ்ந்திருக்கும் மரங்களை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

மரங்களை அகற்றிய பின்னரே மின்கம்பங்களை நட முடியும் என்றார். கஜா புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் 12 ஆயிரம் மின்கம்பங்கள்,102 துணை மின் நிலையங்கள், 95 மின் கடத்திகள், 100 மின் மாற்றிகள், 500 கி.மீ. மின் வழித்தடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று இரவுக்குள் மின் இணைப்புகள் முழுமையாக சரி செய்யப்படும் என கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Activation ,kazah , Minister thangamani, Vigilanka, work for alignment
× RELATED விவசாய தொழிலாளர் நலச்சங்கத்தை செயல்படுத்தி ₹2 ஆயிரம் போனஸ்