×

கஜா புயல் காரணமாக கடலூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கடலூர்: கடலூரில் மதியம் 3 மணிக்கு மேலாக ஏராளமான பேருந்துக்கள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட சில வழிதடங்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூரில் கடல் சீற்றம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் மட்டும் அல்லாது பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தனியார் மற்றும் அரசு பணியில் இருப்பவர்கள் மதியமே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்ப்ட்டுள்ளனர். இதன் காரணமான கடலூரை பொருத்தவரை வெருச்சோடியான காணப்படுகிறது. கடலூர் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் ஆழ்நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது. ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடலூரில் உள்ள இயல்பு வாழ்க்கை மதியத்திற்குமேல் வெகுவாக முடங்கியுள்ளது. மேலும் சில்வர் பீச் பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணமே உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஆயிரம் மீட்டர் அப்பால் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது கடலூர் கடற்கரை ஒட்டுமொத்தமாக கடலோர காவல்படை மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு மாட்டங்களில் இருந்தும் பேரிடர் மீட்புக் குழுவினர் இங்கே மூகாமிட்டுள்ளனர்.

மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்புகளும் கடலூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புயல்களை சந்தித்த மாவட்டம் கடலூர் மாவட்டம் என்பதன் காரணமாக ஒட்டுமொத்த அரசின் கவனமும் கடலூர் பக்கம் திரும்பிருக்கிறது. எனவே எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் புயலினுடைய தாக்கம் இருந்தால் அவர்கள் மக்களை பாதுகாப்பதற்கான மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தடையை மீறி இங்கு வருபவர்களை அப்புறப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு பெரிய இடர்பாடுகளை சந்திக்கும் பொதுமக்கள் 7305715721 என்ற வாட்சர் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டால் வானொலி நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. அதில் 107.8 என்ற அலைவரிசையில் செயல்படும் எனவும், அது மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை அதில் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை குண்டான 9-ம் எண் குண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் இருந்து வலது பக்கம் புயல் கரையை கடக்க இருக்கிறது என்று முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cuddalore ,storm ,Ghaz , Preliminary,activities ,Cuddalore , Ghaz storm
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...