×

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் உள்பட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் எழுத்தாளர் ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95. காமிக்ஸ் ஹீரோக்களின் தந்தை என அழைக்கப்பட்டவர் ஸ்டான் லீ. அரை நூற்றாண்டுக்கு மேலாக உலகம் முழுவதும் தனது சூப்பர் ஹீரோக்களின் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்றவர் ஸ்டான் லீ. அமெரிக்காவின் மன்ஹாத்தனில் பிறந்த அவர், சூப்பர் ஹீரோக்களின் கதாபாத்திரங்களை உருவாக்கினார்.
காமிக்ஸ் உலகில் அவர் நுழைந்த பின், 1939ம் ஆண்டு பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தை உருவாக்கினார். அதன்பிறகு ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், தோர், அயர்ன் மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர், ஹல்க், டேர்டெவில், ஆன்ட் மேன் என இவர் உருவாக்கிய சூப்பர் ஹீரோக்கள் ஏராளம்.

அந்த ஹீரோக்களை வைத்துதான் ஹாலிவுட் படங்கள் உலக அளவில் சாதித்தன. இன்றும் அவர் உருவாக்கிய கேரக்டர்களை வைத்து சூப்பர் ஹீரோக்கள் படங்களின் தொடர்ச்சியான பாகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றிய அவர், சமீபத்தில் நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மரணம் அடைந்தார். அவரது ரசிகர்களும் ஹாலிவுட் திரையுலகினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Stan Lee ,superheroes ,Super Man , Super Man, Spider-Man, Superheroes, Stan Lee, death
× RELATED விருதுநகர் அருகே சாத்தூர் பட்டாசு...