×

எத்தியோப்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 229-ஆக உயர்வு

அடிஸ் அபாபா: வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. எத்தியோப்பியாவின் கோஃபா பகுதியில் கடந்த 21ம் தேதி பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுவரை, 148 ஆண்களும் 81 பெண்களும் கோஃபா மண்டலத்தில் உள்ள கெஞ்சோ-ஷாச்சா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சேற்றில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அரசுக்கு எத்தியோப்பியா அரசு தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் முதற்கட்டமாக 4 வீடுகள் நிலத்தில் புதைந்தனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றபோது மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவு சிக்கி அனைவரும் புதைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 229 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 5 பேர் உயிருடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post எத்தியோப்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 229-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ethiopia ,Addis Ababa ,northeastern ,Kofa region ,Death Toll ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...