×

சேப்பாக்கத்தில் கிரிக்கெட்... போக்குவரத்து மாற்றம்

சென்னை: சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியையொட்டி அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு கீழ்கண்ட சாலைகளில் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பெல்ஸ் சாலை தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலை சந்திப்பிலிருந்து நோ எண்ட்ரியாகவும், வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து எண்டரியாகவும் செயல்படுத்தப்படும்.

காமராஜர் சாலையிலிருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் எம்டிசி மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. பாரதி சாலையிலிருந்து கெனால் சாலை ஒரு வழி பாதையாகவும் வாலாஜா சாலையிலிருந்து நோ எண்ட்ரியாகவும் செயல்படுத்தப்படும். பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் அண்ணா சாலையிலிருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக சென்று கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chepaukam , Cricket,Chepaukam,Traffic,Change
× RELATED சென்னை சேப்பாக்கத்தில் தீ விபத்தால்...