×

மண்டபம் பகுதியில் பலத்த சூறைக்காற்றால் கடலில் மூழ்கிய மிதவை கப்பல்

மண்டபம்: பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தனியார் நிறுவன மிதவை கப்பல் கடலில் மூழ்கியது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை கப்பல் வந்து செல்லும் வகையில், கடலை ஆழப்படுத்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு கப்பல் மற்றும் மிதவை கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வீசிய பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மிதவை கப்பல் சேதமடைந்து கடலில் முழ்கியது. மூழ்கிய மிதவை கப்பலை மீட்கும் பணியில் சக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Mandap ,sea , mandapam, sea, ship
× RELATED வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்