×

ஆடைகள் ஏற்றுமதி என்ற பெயரில் ரன்வீர்ஷா நிறுவனத்தில் இருந்து 300 ஆண்டு பழமையான 6 சாமி வாகனங்கள் பறிமுதல்: சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து 300 ஆண்டு பழமையான மரத்தால் ஆன 6 சாமிகளை  சுமந்து செல்லும் வாகனங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின்படி சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலைக்கடத்தல்  தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்ேடாபர் முதல் வாரத்தில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 700 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள் மற்றும்  கற்சிலைகள் என 247 சிலை பறிமுதல் செய்யப்பட்டன. அதைதொடர்ந்து ரன்வீர் ஷாவின் தோழி கிரண் ராவ்வுக்கு சொந்தமான போயஸ்கார்டன் வீட்டில் நடந்த சோதனையில் மண்ணுக்குள்  புதைக்கப்பட்ட 23 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாதபடி அனைத்து விமான  நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இதற்கிடையே கிரண் ராவ் வீட்டில் சிலைகளை மண்ணுக்குள் புதைத்த அவரது உதவியாளர் தீனதயாளன் உள்ளிட்ட 10 பேருக்கு  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். இதன் முடிவில் கிரண் ராவ் உதவியாளர் தீனதயாளனை கடந்த வாரம் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  அதிரடியாக கைது செய்தனர்.அவன் அளித்த தகவலின்படி நேற்று காலை 10.30 மணிக்கு தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல்  தடுப்பு பிரிவு ஐஜி.பொன்.மாணிக்கவேல் மற்றும் டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரன்வீர் ஷா ஏற்றுமதி நிறுவனத்தின் வரவேற்பு அறையில் வைத்திருந்த தமிழக கோயில்களுக்கு சொந்தமான 300 ஆண்டு பழமையான பெருமாள் சாமி சிலைகளை  ஊர்வலமாக எடுத்து ெசல்லும் சிம்ம வாகனம், காமதேனு வாகனம், ரிஷபம் வாகனம், குதிரை வாகனம், கருடாழ்வார் வாகனம் என 6 மரத்தால் ஆன வாகனங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டன.  இவை கிண்டியில் உள்ள சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் ைவக்கப்பட்டுள்ளன.பலமுறை சம்மன் அனுப்பியும் தொழிலதிபர் ரன்வீர் ஷா நேரில் ஆஜராகாததால்  விரைவில் கைது செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.சுந்தரம் தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த வழக்கில் பறிமுதல்  செய்யப்படும் அனைத்து சிலைகளுக்கும் ஆவணங்கள் உள்ளதாக ரன்வீர் ஷா தரப்பில் போலீசாருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் தரப்பில் ரன்வீர் ஷா தப்பில்  கொடுக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்று தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு பிந்தைய சிலைகளுக்கு மட்டும் தான் ஆவணங்கள் உண்டு. ஆனால், ரன்வீர் ஷா வீடு  மற்றும் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் சோழர் காலத்து சிலைகள். எனவே இந்த சிலைகளுக்கு யாரும் உரிமை கோர முடியாது என்று ரன்வீர் ஷா தரப்புக்கு  போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.சிலை கடத்தல் வழக்கில், தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து சிலைகள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் ஓரிரு நாளில் அவர் கைது  செய்யப்படக்கூடும் என்று சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : company ,Ranvira , 300-year-old 6-year-old ,Ranvira's ,name of garments exports: Police Prevention
× RELATED திருப்பூரில் பனியன் கம்பெனியை...