×

‘வாவ்... சூப்பர் மசாலா’ வக்கீல் உடையில் நடித்த அமிதாப்புக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: விளம்பரம் ஒன்றில் வக்கீல் உடை அணிந்து நடித்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு டெல்லி வக்கீல்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மசாலா பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றின் விளம்பர படத்தில் வக்கீலாக அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இதை எதிர்த்த அமிதாப்புக்கு டெல்லி வக்கீல் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனம், ஊடக நிறுவனம் மற்றும் யு-டியூப் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமிதாப்புக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், ‘வக்கீல் வேடம் போடுவதற்கு முன், டெல்லி பார் கவுன்சில், பார் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பிற மாநில பார் கவுன்சில்களிடம் அனுமதி பெற வேண்டும். இந்த நோட்டீசுக்கு 10 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. இது பற்றி அமிதாப் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த விளம்பர காட்சியில், வக்கீல் உடையுடன் பாவ் பாஜி ருசிக்கும் அமிதாப், ‘‘வாவ், சூப்பர் மசாலா...’’ என்கிறார். இதைதான் வக்கீல் சங்கம் எதிர்த்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amitabh , Advertisement, lawyer dress, Amitabh Bachchan, notices
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்