×

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் செஞ்சி, வேப்பூர் வாரச்சந்தையில் 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

செஞ்சி : கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று நடந்த வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை விற்பனைக்கு வருவது வழக்கம். வரும் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று நடந்த வாரச்சந்தைக்கு பெங்களூர், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகள் வாங்க அதிகாலை முதலே குவிந்தனர். அதிகாலை 3 மணியில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இருப்பினும் தேவை அதிகமாக இருந்ததால் காலை 8 மணிக்கே அனைத்து ஆடுகளும் மளமளவென விற்றுத் தீர்ந்தன. இதனால் 8 மணிக்கு மேல் வந்த வியபாரிகள் ஆடுகள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட இன்று கூடுதலாக ஆடுகள் வந்தன. ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலைபோனது. கடந்த வாரத்தைவிட கூடுதலாக ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. மொத்தமாக ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது. இதேபோன்று மாடுகள், நாட்டுக் கோழி விற்பனையும் களைகட்டியது.
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை கூட்டுரோடு பகுதியில் வெள்ளிக் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதில் அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை ஆடுகள் விற்பனை நடைபெறுவது உண்டு. அதன்பின்னர் காய்கறிச்சந்தை தொடங்கும்.   இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 6ம்தேதி கொண்டாடப்படுவதால் இன்று நடந்த வாரச்சந்தையில் வழக்குத்திற்கு மாறாக ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

மழை பெய்தபோதிலும் அதனை பொருட்படுத்தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதில் கடலூர், சேலம், நாமக்கல், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்கிக்சென்றனர். இன்று காலை மட்டும் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது. வேப்பூர் சந்தையில் வழக்கமாக ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்படுவது உண்டு. ஆனால் இன்று மழை கொட்டியதால் வியாபாரிகள் வருகை குறைந்து விற்பனையும் சரிந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festivals ,Veypore ,Gingee , Diwali festivals , 6 crore crores ,rupees, Gingee, Veypore weekend
× RELATED பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது