×

மிதாலி ராஜின் சாதனைகள் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு..! கோவை பேருந்து நடத்துனருக்கும் பாராட்டு

டெல்லி: மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் சாதனைகள் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையானவர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று மனதில் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகளிர் தினத்தை கொண்டாடும் இந்த மார்ச் மாதத்தில் பெண்கள் பலர் சாதனைகளை புரிந்துள்ளனர். ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா முதலிடம் பெற்றது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கிடையில், பி.டபிள்யூ.எஃப் சுவிஸ் ஓபன் சூப்பர் 300 போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சாதனை புரிந்த அவர்களுக்கு என் பாராட்டுகள். இதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான பெண்களைவெளியே கொண்டு வர வேண்டும் என்றார்.கோவை பேருந்து நடத்துனருக்கு பாராட்டுகோவை பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது கோவை பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதனுக்கு பாராட்டு தெரிவித்தார். கோவையில் பேருந்து நடத்துனரான மாரிமுத்து யோகநாதன், டிக்கெட்டுடன் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை இதற்காக செலவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது முயற்சிகளுக்கு என்னுடைய பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்….

The post மிதாலி ராஜின் சாதனைகள் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு..! கோவை பேருந்து நடத்துனருக்கும் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : MITHALI RAJIN ,MODI ,MIND ,Goa ,Delhi ,Mithali Raj ,PM Modi ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...