×

தேசிய பாதுகாப்பு படையில் 6 மாதமாக ஐஜி பணியிடம் காலி

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) எனப்படும் கருப்பு பூனை படையில் ஐஜி பணியிடம் கடந்த 6 மாதமாக காலியாக உள்ளது. மேஜர் ஜெனரல் ஷாஷங்க் மிஸ்ரா பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டார். இதனையடுத்து கடந்த ஏப்ரல் முதல் அந்த பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அதிகாரி இந்த பொறுப்பை கூடுதலாக கவனிக்கிறார். இதுவரை மேஜர் ஜெனரல் மட்டத்திலான புதிய அதிகாரி இதுவரை நியமிக்கப்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு ராணுவத்தில் இருந்து பொருத்தமான அதிகாரியை விரைவில் நிரப்ப வேண்டும் என்று சிறப்பு படை கேட்டுக்கொண்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : National Security Forces ,IGP , National Security Force, IGS
× RELATED தேசிய பாதுகாப்பு படையினர் சென்னையில்...