×

தூய்மையான தொகுதியாக மாற்றுவேன்: பிரபாகர் ராஜா வாக்கு சேகரிப்பு

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா நேற்று கலைஞர் நகர் வடக்கு பகுதி 128வது வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட-டிவி ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளை வெற்றி பெற்றதும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார். பின்னர், பிரபாகர் ராஜாவை ஆதரித்து மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘விருகம்பாக்கம் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். திமுகவுக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவார்,’ என்றார். வேட்பாளர் பிரபாகர் ராஜா பேசுகையில், ‘கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பட்டா கோரிக்கை நிறைவேற்றப்படும். 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விருகம்பாக்கம் தொகுதியை தூய்மையான தொகுதியாக மாற்றுவேன்,’ என்றார்.பகுதி செயலாளர் கே.கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி, வட்ட செயலாளர்கள் செந்தில்குமார், அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்….

The post தூய்மையான தொகுதியாக மாற்றுவேன்: பிரபாகர் ராஜா வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Prabhakar Raja ,Chennai ,Virugambakkam ,Constituency ,DMK ,AMV ,128th Constituency ,Kalyan Nagar North ,Dinakaran ,
× RELATED கிரெடிட் கார்டு கணக்கில் ரூ.1.48 லட்சம் திருட்டு..!!