நா.முத்துசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நா.முத்துசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்க் கலையுலகில் மறக்க முடியாத பெயர், கூத்துப்பட்டறைக்கு உண்டு, அதனை உருவாக்கியதோடு பல்வேறு நாடகங்களையும், நாடகக் கலைஞர்களையும் தமிழ் உலகுக்கு உருவாக்கிக்  கொடுத்தவர் நா.முத்துசாமி. அவரது மறைவு தமிழ்க் கலையுலகுக்கு ஏற்பட்ட இழப்பு. இந்தியா முழுவதும் அறிந்த தமிழ் நாடக ஆளுமை அவர். தமிழக அரசின் விருது, சங்கீத நாடக அகாடமி விருது  ஆகியவற்றோடு இந்திய அரசின் உயர் விருதான பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். அவர், உருவாக்கிய நாடக, திரையுலக கலைஞர்கள் அவரது கனவை எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது. நா.முத்துசாமியின் குடும்பத்தினருக்கும், அவரது கலைக் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: