×

நீர் மேலாண்மையில் ஈடுபாடு இல்லாதது பேராபத்தில் முடியும்: தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் எச்சரிக்கை

சென்னை: தமிழக அரசு நீர் மேலாண்மை குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பெரும் ஆபத்தில் முடியும் என அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  நீர் மேலாண்மை செயல்பாட்டில், தனி முத்திரை பதித்து உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜெயலலிதா. இல்லம்தோறும் அவர் உருவாக்கிய மழைநீர் சேகரிப்பு திட்டம் அதனை எடுத்துரைத்தது. அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

தற்போதோ நிலத்தடி நீர்மட்டம் எந்த அளவில் உள்ளது? சென்னை போன்ற பெரு நகரங்களில், அபாயகரமான அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. தமிழக அரசு நீர் மேலாண்மை குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பெரும் ஆபத்தில் முடியும் என எச்சரிக்கிறேன். நீர் மேலாண்மையிலும், நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதில், இந்த அரசு முழு அரசு இயந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : deterrent , water management, disaster, Government of Tamil Nadu, TTV Dinakaran,
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...