×

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர்

காம்பேக்ட் செடான் ரகத்தில் மிக குறைவான பட்ஜெட் கொண்ட மாடல் டாடா டிகோர். இந்நிலையில், காம்பேக்ட் செடான் ரகத்தில் முன்னணி மாடல்கள் புதுப்பொலிவுடன் வந்துவிட்ட நிலையில், டாடா டிகோர் காரும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருக்கிறது. புதிய டாடா டிகோர் காரின் உட்புறத்தில் சாம்பல் மற்றும் கருப்பு வண்ணத்திலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் முக்கிய மாற்றமாக 7 அங்குல தொடுதிரையுடன்கூடிய ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலி, ரிவர்ஸ் கேமரா மற்றும் வீடியோ பிளேபேக் வசதிகளை இந்த சாதனத்தின் மூலமாக பெற முடியும். புதிய டாடா டிகோர் கார் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும்,, 114 என்எம் டார்க் திறனையும், டீசல் இன்ஜின் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததது.

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே தேர்வுக்கு கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டாடா டிகோர் கார் 5 பெட்ரோல் வேரியண்ட்டுகள் மற்றும் 4 டீசல் வேரியண்ட்டுகளில் என 9 வேரியண்ட்டுகளில் தேர்வுசெய்து கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 6 விதமான வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. புதிய டாடா டிகோர் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.20 லட்சம் முதல் ரூ.6.65 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.6.09 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) வரையிலான விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tata Decor
× RELATED ஆண்டுக்கு 75 லட்சத்திற்கும் அதிகமானோர்...