×

ஆயுத பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக கூடுதலாக 770 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இன்று இரவு மற்றும் நாளை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், விடுமுறை முடிந்த பின் ஞாயிற்றுக்கிழமையும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Koyambedu ,arsenal holiday , Ayutha pooja, holidays, Koyambedu, special buses
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன்...