சாதாரண பெண்களும்கூட இனிமேல் பாதிப்பை தைரியமாக சொல்வார்கள்: ‘மி டூ’ விவகாரத்தில் நடிகை ரோகினி கருத்து

சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, சங்கத்தின் துணை  தலைவர் நடிகை ரோகினி அளித்த பேட்டி: தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிரான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ‘ஸ்டெர்லைட்’ ஆலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் மக்கள், 8 வழிச்சாலையை எதிர்க்கும் விவசாயிகள், பத்திரிகையாளர்கள் என பலர் மீது, ஆங்கிலேயர் கால் சட்டங்களை கொண்டு, அரசு கைது செய்கிறது. இதுபோல், தொடர்ந்து கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்து வருகிறது.

இந்த நிகழ்வுகள் இனி நடைபெற கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும்  விதமாகவும், ‘‘கருத்துரிமை  போற்றுதும்’’ என்ற தலைப்பில் நிகழ்வு நடத்தப்படுகிறது.  காமராஜர் அரங்கில், வரும் 19ம் தேதி நடக்கும் இந்நிகழ்வில், தமிழகம் முழுவதுமிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என கலந்துகொள்கின்றனர். ‘மி டூ’ இயக்கம் தவறானதா, இல்லையா என்பது போகப்போக தான்  தெரியவரும். மேலும், சின்மயி, தைரியமாக புகார் கூறியிருப்பதால், இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட சாமானிய பெண்களும் தங்களது கருத்துக்களை  வெளியில் தைரியமாக சொல்ல முன்வருவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>