×

மனைப்பிரிவு வரன்முறை செய்ய நவ.3 கடைசி டிடிசிபிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்காவிட்டால் நடவடிக்கை

சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனுமதியற்ற மனைகளை வரன்முறை செய்வதற்கான கட்டாய விண்ணப்பம் பெற காலக்கெடு 3.11.2018ல் முடிவுறுகிறது. அனுமதியற்ற மனைபிரிவுகள்/மனைகள் முறைப்படுத்தல் தொடர்பாக சமீபத்தில் முதன்மை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சில மாநகராட்சி/நகராட்சிகளில் உள்ள மனைப்பிரிவு வரைபடங்கள் அனுமதி பெற நகர் ஊரமைப்புத்துறைக்கு சமர்பிக்காமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.மாநகராட்சி/நகராட்சியினால் கண்டறியப்பட்ட மனைபிரிவுகளுக்கான ஒப்புதல் பெற 3.11.2018க்கு பின் விண்ணப்பம் ஏதும் சமர்பிக்க இயலாது. அதே போன்று மனைப்பிரிவு உரிமையாளர்கள்/மனைப்பிரிவு மேம்பாட்டாளர்களிடம் இருந்து மனை பிரிவுகளை முறைப்படுத்த விண்ணப்பங்களை 3.11.2018க்கு பின் சமர்பிக்க இயலாது.

எனவே, 3.11.2108க்கு முன்பாக அனைத்து மனைப்பிரிவு வரைபடங்களையும் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. வரைமுறைப்படுத்தப்பட வேண்டிய மனைபிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் நகர் ஊரமைப்புத்துறைக்கு (டிடிசிபி) சமர்பிக்கப்படாமல் இருந்தாலோ/ வரும்காலங்களில் நகர் ஊரமைப்புத்துறையிடம் அனுப்பப்படாத வேறு மனைபிரிவுகளில் இருப்பது கண்டறியப்பட்டலோ சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Step 3 ,DTCB ,DTC , Land line, draft, ddcp
× RELATED திமுக ஊராட்சி மன்ற தலைவர்...