×

தி.மலை தீபத்திருவிழாவையொட்டி தேர்களுக்கு புதிய சங்கிலி: தயாரிக்கும் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஏழாம் திருவிழாவான 20ம் தேதி பஞ்சமூர்த்திகள் மகா ரதங்கள் வீதியுலாவும், விழாவின் நிறைவாக, நவம்பர் 23ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். தீபத்திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் ஏழாவது நாள் பஞ்சரத வீதியுலா நடைபெற உள்ளது.

அதையொட்டி ரதங்கள் சீரமைக்கும் பணிகளும், அதில் பொருத்தப்படும் குதிரைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் முருகர் மற்றும் அம்மன் தேர்களில் பயன்படுத்தப்படும் சங்கிலிகள் புதியதாக ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.அண்ணாமலையார் கோயில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி அருகே புதிய சங்கிலி தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thalapattiravaiyalai Thalai , Thalassery festival, chair, new chain, work
× RELATED 3 நாள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?