×

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் இன்று 2வது நாளாக குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் இன்று 2வது நாளாக குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு மே மாதத்தின் 2வது வாரத்தில் அதாவது கோடை வெயில் மற்றும் அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கூட அருவிகளில் தண்ணீர் விழுந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை அல்லது சீசன் காலம் இன்னும் முழுமையாக துவங்காத நிலையில் அருவிகளில் தண்ணீர் நன்றாக வருகிறது‌‌. மெயின் அருவியில் ஆண்கள், பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் நன்றாகவும், 2 பிரிவுகளில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. புலி அருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

8 நாட்களுக்கு பின்னர் கடந்த இரண்டு தினங்களாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் தடையின்றி குளிக்க அனுமதிக்கப்படுவதால், அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடைகாலம் மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இதற்கிடையே குற்றாலத்தில் சீசன் காலம் அதாவது தென்மேற்கு பருவமழை காலம் துவங்குவதற்கு முன்னோட்டமாக விளங்கும், தென்மேற்கு பருவக்காற்று நன்றாக வீசி வருகிறது. இந்த ஆண்டு வரும் 29ம்தேதி தென்மேற்கு பருவமழை காலம் கேரளாவில் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒன்று இரண்டு தினங்கள் தாமதமானாலும் ஜூன் வாரத்தில் சீசன் முழுமையாக துவங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

The post குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் இன்று 2வது நாளாக குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Courtalam ,Tenkasi ,Agni ,
× RELATED வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பிக்க...