×

தமிழகம் முழுவதும் 67 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு: தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 67 இன்ஸ்பெக்டர்களை டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
 தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ேநற்று பிறப்பித்துள்ள உத்தரவின் விபரம் வருமாறு: சென்னை ஆவடி சட்ட  ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த கர்ணன் அம்பத்தூர் உதவி கமிஷனராகவும், திருவள்ளூர் மாவட்ட மணவாளன்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சர்தார் ரகமத்துல்லா ஷெரிப் திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும், நுங்கம்பாக்கம் இன்ஸ்ெபக்டராக இருந்த சுந்தரமூர்த்தி சென்னை காவல் துறை மக்கள் தொடர்பு துறை  உதவி கமிஷனராகவும், சென்னை கோட்டை சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த துரைப்பாண்டியன் வேலூர் மாவட்டம் அரக்கோணம் டிஎஸ்பியாகவும்,

சென்னை எழுக்கிணறு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த உக்கிரபாண்டியன் மயிலாப்பூர் உதவி கமிஷனராகவும், மதுரவாயல் குற்றப்பிரிவு இன்ஸ்ெபக்டராக இருந்த ஈஸ்வரன் சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராகவும், வளசரவாக்கம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த முத்துராஜ் தஞ்சை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும், சிசிஐடபள்யூ சிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த ஜெகதீஸ்வரன் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனராகவும், சென்னை தலைமையிட சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த சிங்காரவேலு சென்னை தலைமையிட சிபிசிஐடி டிஎஸ்பியாகவும், சென்னை கிழக்கு மண்டல இன்ஸ்பெக்டராக இருந்த சபாபதி சென்னை வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும், பாதுகாப்பு பிரிவு சிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த காரியப்பா சென்னை தலைமையிட ஓசிஐயூ டிஎஸ்பியாகவும்,

பாதுகாப்பு பரிவு சிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த துரைப்பாண்டியன் சென்னை தலைமையிட ஒசிஐயூ டிஎஸ்பியாகவும், ஊழல் மற்றும் லஞ்ச  ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டராக இருந்த பாஸ்கரன் சென்னை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாகவும், சிட்லப்பாக்கம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ரமேஷ் சென்னை பட்டாபிராம் சரக உதவி கமிஷனராகவும், திருவேற்காடு சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த அலெக்சாண்டர் மதுரை நகர நில அபகரிப்பு பிரிவு உதவி கமிஷனர் என தமிழகம் முழுவதும் 67 இன்ஸ்பெக்டர்களை டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : inspectors ,Niranjan Mardy ,Tamil Nadu , 67, inspector, DSP, promoted
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...