×

ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பு: ரகளையில் ஈடுபட்டதால் திரும்பி சென்றனர்

தாம்பரம்: தாம்பரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் கணேஷ் நகர் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோயில் உள்ளது. அதே பகுதியில் இக்கோயிலுக்குச் சொந்தமாக 14 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை 12 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 118 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்கக்கோரி கடந்த 2006ம் ஆண்டு தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சித்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள், அதிகாரிகளை ஆக்கிரமிப்பை அகற்றவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டு பொக்லைன் இயந்திரங்களை அப்பகுதியின் உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்தோம். ஆனால் இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் எங்களை தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. விரைவில் நீதிமன்றத்தில் மறுதேதி பெறப்பட்டு இங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்போம்’’ என தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : occupants ,race , Occupation, last officer, people's opposition
× RELATED அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி