×

எத்தனால் உற்பத்தி போட்டி போடும் ஆலைகள்

புதுடெல்லி: பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு காரணம். எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு சர்க்கரை ஆலைகள் தரப்பிலும் வரவேற்பு உள்ளது. எத்தனால் தயாரிப்புக்கு பாய்லர், வடிப்பான்கள் அமைக்க கோரிய ஆலைகளின் 100 விண்ணப்பங்களுக்கு 3 மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய எத்தனால் உற்பத்தி திறன் 275 கோடி லிட்டர். 10 சதவீதம் பெட்ரோலில் கலக்க உற்பத்தி திறன் 325 கோடி லிட்டராக அதிகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ethanol production rival mills , Ethanol, production, competition, mills
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...