வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிரசாரத்துக்கு வந்த அதிமுக வேட்பாளர் மான்ராஜை கூட்டணி கட்சியினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மான்ராஜ் போட்டியிடுகிறார். இவர் ேநற்று முன்தினம் இரவு வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியில் வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் வைரக்குட்டி தலைமையிலான அவரது கட்சியினர், வேட்பாளர் மான்ராஜை தடுத்து நிறுத்தினர்.‘‘நாங்கள் கூறிய பகுதிகளில் பிரசாரத்திற்கு ஏன் வரவில்லை? இதனால் எங்களுக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மச்சியார்புரம் காலனி, நெடுங்குளம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்திற்கு வரக்கூடாது. திரும்பிச் செல்ல வேண்டும்’’ என்று வலியுறுத்தி சாலையை மறித்து நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக வேட்பாளர் மான்ராஜ், கூமாபட்டி பஸ் ஸ்டாண்டிற்கு சென்று பிரசாரம் செய்து விட்டு சென்று விட்டார்.இதுகுறித்து வைரக்குட்டி கூறுகையில், ‘‘எங்கள் கட்சித் தலைவர் ஜான்பாண்டியன் உத்தரவுப்படி அதிமுக வேட்பாளருக்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். இமானுவேல் தெரு, அம்மச்சியார்புரம் காலனி, நெடுங்குளம் உள்ளிட்ட இடங்களுக்கு வேட்பாளர் மான்ராஜ் வருவதற்காக எங்கள் சொந்த செலவில் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், வராமல் அவமரியாதை செய்து விட்டார். இனி எங்கள் தலைவர் அதிமுகவினருக்கு பிரசாரம் செய்ய சொன்னால் தான் செய்வோம். அவர் சொல்லாவிட்டால் அதிமுகவிற்கு ஓட்டும் போட மாட்டோம்’’ என்றார்….
The post ‘‘நாங்க சொன்ன இடத்துக்கு ஏன் வரலை?’’அதிமுக வேட்பாளர் பிரசாரத்தைதடுத்து நிறுத்திய கூட்டணி கட்சியினர்: வத்திராயிருப்பு அருகே திருப்பி அனுப்பினர் appeared first on Dinakaran.