×

18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயின் கோரிக்கை

புதுடெல்லி: பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டெல்லி அரசு கோவிட்-19 தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என  அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.  இதுபோன்ற ஒரு நடவடிக்கை முழு உலகிற்கும் ஒரு  முன்மாதிரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோயால் பாதிக்கப்பட்ட 45-59 வயதுடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  ஆனால், தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போட மத்திய அரசு அனுதி வழங்கியுள்ளது. இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். இது கொரோனா வைரஸை வெற்றிகொள்ள முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியாக அமையும்\” என்று அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ட்வீட்  செய்துள்ளார். நாடு முழுவதும் முதல்கட்ட கோவிட் தடுப்பூசி கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களளுக்கும் பிப்ரவரி 2ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இரணடாம்கட்ட தடுப்பூசி கடந்த மார்ச் 1ம் தேதி தொடஙகியது குறிப்பிடத்தக்கது….

The post 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயின் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Jain ,central government ,New Delhi ,Satyender ,Delhi government ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...