×

மக்கள் பிரச்னை தீர்க்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு

சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 171வது வட்டத்திற்கு உட்பட்ட சின்னமலை, ஆரோக்கிய மாதா நகர், தாமஸ் நகர், பிஷப் காலனி, கக்கன்புரம், பிடிசி குடிசை பகுதி, ஸ்ரீநகர்  காலனி, ரங்கராஜபுரம், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மாலையில் வெங்கடாபுரம் குடிசை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.  அப்போது மக்கள் மத்தியில் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘171வது வார்டுக்கு உட்பட்ட சுப்பு பிள்ளை தோட்டம் பகுதி உடற்பயிற்சி கூடத்திற்கு ரூ.5 லட்சத்தில் கருவிகள், கிழக்கு பாரதிதாசன் தெருவில் ரூ.5 லட்சத்தில் சாலையோர பூங்கா,  அரசு பண்ணை குடியிருப்பில் ரூ.25  லட்சத்தில் சமூக நலக்கூடம், வெங்கடாபுரம்  உடற்பயிற்சி கூடத்திற்கு ரூ.5 லட்சத்தில் கருவிகள், சின்னமலை மாநகர போக்குவரத்து  பணிமனையில் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்தில் ஓய்வு அறை போன்ற பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்துள்ளேன். இதேபோல் எல்.டி.ஜி.  சாலையில் ரூ.15 லட்சத்தில் சாலையோர பூங்கா அமைக்கும்  பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வளச்சி திட்ட பணிகளை  மேற்கொள்ளவும், மக்கள் பிரச்னைகளை தீர்க்கவும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்,’ என்றார். திமுக பகுதி செயலாளர் இரா.துரைராஜ், மாவட்ட அவை தலைவர் எஸ்.குணசேகரன், வட்ட செயலாளர் ஆரி (எ) எல்.ஆரோக்கியராஜ்,  எஸ்.ராதாகிருஷ்ணன், விசிக ஜேக்கப் உள்ளிட்ட  கூட்டணி கட்சிகள், திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post மக்கள் பிரச்னை தீர்க்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : M. Subramanian ,Chennai ,Saidappettai Assembly Constituency DMK ,M.Subramanian ,Chinnamalai ,Arogya Mata ,
× RELATED நீட் தேர்வில் குழப்பம், குளறுபடி தேசிய...