×

அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம். வெல்க தமிழ் சினிமா! : 7 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கமல் புகழாரம்!!

டெல்லி : 67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இது 2019ம் ஆண்டுக்கான விருது ஆகும். இதில் தமிழகத்திற்கு மட்டும் 7 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் டி.இமான். சூப்பர் டீலக்ஸ் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணைநடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்புபடத்திற்கு 2 தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக அசுரம் படம் தேர்வாகி இருக்கிறது.கே.டி. எனும் கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதும், ஒத்த செருப்பு படத்தின் சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்கொட்டிக்கும், சிறப்பு பிரிவின் ஜூரி விருது ஒத்த செருப்பு படத்திற்கும் கிடைத்திருக்கிறது.இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன்,’’7 தேசிய விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களுக்கும், அவர்தம் அணியினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம். வெல்க தமிழ் சினிமா!’’ என்று தெரிவித்துள்ளார்….

The post அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம். வெல்க தமிழ் சினிமா! : 7 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கமல் புகழாரம்!! appeared first on Dinakaran.

Tags : Kamal Pukhazharam ,Delhi ,67th National Film Awards ,Tamil Nadu ,Kamal ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...