×

காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் அரியானா மாநில அரசு டெல்லி பங்கு தண்ணீரை முழுமையாக திறந்து விடாததே பற்றாக்குறைக்கு காரணம் என்று நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியினார். அரியானா அரசு தண்ணீர் திறந்துவிடக்கோரி கடந்த 22ம் தேதி முதல்வர் அதிஷி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அமைச்சர் அதிஷி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. எனவே உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அதிஷிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 5நாட்கள் நீடித்த அவரது உண்ணாவிரதப்போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கூறுகையில்,\\” அரியானாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்படும். இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி மற்றும் அவரது அரசியல் கூட்டணி கட்சிகள் எழுப்பும்” என்றார்.

The post காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Delhi ,minister Adishi ,New Delhi ,Delhi government ,Ariana ,Delhi Minister ,Adishi ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...