×

ஆச்சார்யா பால சிக்‌ஷா மந்திர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புதுச்சேரி : புதுச்சேரி தேங்காய்த்திட்டு ஆச்சார்யா பால சிக்‌ஷா மந்திர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆச்சார்யா பள்ளி குழும தலைவர் டாக்டர் அரவிந்தன் தலைமை தாங்கினார். ஸ்ரீபாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுபாஷ் சந்திர பரிஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்கால குறிக்கோள்களின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். இதில் பள்ளி முதல்வர் கவிதா மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது முன்னாள் மாணவர்கள் இப்பள்ளியின் சிறப்பினையும் மேன்மையையும் தங்கள் அனுபவத்தையும், அதனால் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் விரிவாக எடுத்து கூறி மகிழ்ந்தனர். இதில் பங்கு பெற முடியாத வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர். இப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவர்களை பள்ளி இணைப்பு சங்க நிர்வாகிகளாக பள்ளியின் தாளாளர் அரவிந்தன் நியமித்தார். அதன்படி பள்ளி இணைப்பு சங்க தலைவராக சபரிஷ், செயலாளராக நிவேதா, பொருளாளராக ஹரிராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நிறைவாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது….

The post ஆச்சார்யா பால சிக்‌ஷா மந்திர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Acharya Bala Chiksha Mandir ,Puducherry ,Teenkaithidhi Acharya Pala Chiksha Mandir School ,Acharya Pala Chiksha ,Mandir ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!