×

பயிற்சியின்போது மின்னல் தாக்கி அலைசறுக்கு வீராங்கனை பரிதாப பலி

எல்சால்வேடார் நாட்டை சேர்ந்த இளம்பெண் சர்ஃபர் கேத்ரின் தியாஸ் ஹெர்னாண்டஸ் (22). அலைசறுக்கு வீராங்கனையான இவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவோம் என்ற பெருங்கனவோடு இருந்தவர். இதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள கடற்கரையில் தினமும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சமையல் கலை வல்லுனரான அவர் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சர்ஃபர் கேத்ரின் தியாஸ் ஹெர்னாண்டஸ் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதனை அந்த நாட்டு தேசிய விளையாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச அலை சறுக்கு தொடரில் பங்கேற்க அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தபோது நடந்த இந்த திடீர் மரணம் எல் சால்வேடார் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது….

The post பயிற்சியின்போது மின்னல் தாக்கி அலைசறுக்கு வீராங்கனை பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Katherine Díaz Hernández ,El Salvador ,Tokyo ,Japan ,
× RELATED ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்