×

கோவைப்புதூரில் திடீர் காட்டு தீ: 2.5 ஏக்கர் வனம் எரிந்து நாசம்

கோவை: கோவைப்புதூர் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 2.5 ஏக்கர் வனம் கருகியது. கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இங்கிருந்து மிகவும் அருகில் வனப்பகுதி உள்ளது. பட்டா நிலத்தில் பரவிய தீ மளமளவென வனப்பகுதிக்குள் பிடித்தது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இத்தகவலையடுத்து மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில், மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனப்பணியாளர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் வனத்துறையினர், பொதுமக்கள் இணைந்து 3 மணி நேரம் போராடி வனத்திற்குள் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் சுமார் 2.5 ஏக்கர் வனப்பகுதி எரிந்து தீயில் கருகியது….

The post கோவைப்புதூரில் திடீர் காட்டு தீ: 2.5 ஏக்கர் வனம் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Govaipothur ,Govay ,Govai Matrakkar ,Nasam ,Dinakaran ,
× RELATED திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1,000...