×

சீயக்காய் விவசாயத்திற்கு நிதி

சீயக்காய்  விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பெல்லந்தூர், பைரமங்களாவில் உள்ள ஏரிகளில் தண்ணீர் அதிக அளவு  மாசுபடுகின்றது. சோப்பு, வேதிப்பொருட்கள் நிறைந்த துவைக்கும் சோப்பு போன்ற  கழிவுகள் ஏரியில் விடப்படுகின்றது. இதனால் அதிக அளவு நுரை உருவாகி நீர்  மாசுபடுகின்றது. இதற்கு காரணம் ஏரியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  வசிப்பவர்கள். வேதிப்பொருட்கள் நிறைந்த சோப்பு பயன்படுத்துவதே ஆகும்.எனவே  இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சோப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.  

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.  பாத்திரங்கள் கழுவ, துணி துவைக்கும் இயந்திரத்தில் பயன்படுத்தும் இயற்கை  சோப்பு, சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நமது  விவசாயிகளும் ஊக்குவிக்கப்படுவார்கள். தொழில்முனைவோருக்கு வாய்ப்பு  அளித்ததுபோலவும் இருக்கும். இதற்காகவும் திட்டத்தை ஊக்குவிப்பதற்காகவும்  ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

30 கோடி செலவில் திரைப்பட பல்கலை:
சினிமா  தொழில் பயிற்சி பெற ரூ.30 கோடி செலவில் ராம்நகர் மாவட்டம் திரைப்பட  பல்கலைக்கழகம் நிறுவப்பட இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சினிமா துறையை வளர்க்கும் நோக்கில்  மற்றும் சினிமா பயிற்சி பெறுவதற்காக ராம்நகர் மாவட்டத்தில் புதிய திரைப்பட  பல்கலைக்கழகம் நிறுவப்படும். இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  இதில் திரைப்பட தயாரிப்பு, இயக்கம், போட்டோ கிராபி, ஒளிப்பதிவு, எடிட்டிங்  உள்பட பல்வேறு பயிற்சிகள் பெறலாம். மேலும் ரூ.40 கோடி செலவில் ராம்நகர்  பிலிம் சிட்டி அமைக்கப்படும். இதில் திரைப்பட தொடர்பான அனைத்து  பயன்பாடுகளும் இடம் பெற்றிருக்கும்.

நீர்வீழ்ச்சிகளில்அடிப்படை கட்டமைப்புகள்:
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் பரசுக்கி மற்றும் ககனசுக்கி நீர் வீழ்ச்சிகளின் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில்  கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் தரமான உணவு மற்றும் ரூ.3 கோடி செலவில் முக்கிய சுற்றுலா தலங்களில் 3 ஸ்டார் ஓட்டல் போன்று 500 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகள் கட்டப்படும்.

அதேபோன்று வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் பரசுக்கி மற்றும் ககனசுக்கி நீர் வீழ்ச்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதுதவிர ராம்நகர் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்யும் நோக்கில் கலை கிராமங்கள் வடிவமைக்கப்படும். இதில் குழந்தைகள் விளையாடுவதற்கான பல்வேறு அடிப்படை வசதிகள், கால்வாய் அமைத்து கொடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு