நாமக்கல்: நாமக்கல்லில், நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணியில் ஈடுபட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ ஆகியோர் தலைமை வகித்தனர். இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் தோழமை கட்சியினர் 400க்கும் மேற்பட்டவர்களை போலீசார் விரட்டி விரட்டி கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
