×

தரங்கம்பாடி பகுதியில் கோடை வெயிலுக்கு இதமான கரும்புச்சாறு விற்பனை படுஜோர்

தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், சென்னை – நாகை தேசிய நெடுஞ்சாலையில் கோடை காலத்தின் தாகம் தீh;க்கும் கரும்பு ஜீஸ் விற்பனை படு ஜோரக நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கூர் முக்கூட்டில் இருந்து தரங்கம்பாடி வரை சாலையோரரம் கரும்புச்சாறு விற்பனை நடந்து வருகிறது. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர், தாகம் தீர்க்கும் கரும்புச்சாறு அருந்துகின்றனர்.இதுகுறித்து ஆக்கூர் முக்கூட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கரும்புச்சாறு விற்பனை செய்யும் காசிராஜ் கூறியதாவது: கோடை காலத்தில் தாகம் தீர்க்க மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான பானமாக கரும்புச்சாறு உள்ளது. இதனால் கரும்புச்சாறை பொதுமக்கள் விரும்பி குடிக்கின்றனர். கரும்புச்சாறு விற்பனை 6 மாதம் நடக்கும். அதன்பிறகு விவசாய பணிக்கு சென்று விடுவேன். கோடை காலத்தில் எங்கள் வாழ்வாதாரத்துககு கரும்புச்சாறு விற்பனை கைகொடுக்கிறது. கரும்புச்சாறுக்கு தேவையான கரும்புகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளைவிக்கப்படுகின்றன. அதனால் எங்களுக்கு எளிதாக கரும்பு கிடைக்கிறது என்றார்….

The post தரங்கம்பாடி பகுதியில் கோடை வெயிலுக்கு இதமான கரும்புச்சாறு விற்பனை படுஜோர் appeared first on Dinakaran.

Tags : Padujor ,Tharangambadi ,Mayiladuthurai District, Chennai ,Nagai National Highway ,
× RELATED வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த...