- அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்
- தன்யர்பேட்டை
- அமைச்சர்
- ஜெயக்குமார்
- ராயபுரம்
- தொகுதியில்
- ஜெயக்குமார்
- 53வது வட்டம்
- ரகூத்தலம்
- ராமதாஸ் நகர்,
- கட்பாடா
தண்டையார்பேட்டை:ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை 53வது வட்டத்துக்கு உட்பட்ட மூலகொத்தலம், ராமதாஸ் நகர், காட்பாடா மெயின்ரோடு, லேபர் லைன், ஸ்டான்லி நகர், சி.டி.ரோடு, நாகப்பா நகர், சிதம்பரம் நகர், படவேட்டம்மன் கோயில் தெரு, எம்.எஸ்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, பேசின்பிரிட்ஜ் ரயில்வே குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘ராமதாஸ் நகர் பகுதி மக்கள் குடிசையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூலக்கொத்தலம் சுடுகாடு அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. மேலும் ₹5 கோடியில் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மூலக்கொத்தலம் சுடுகாடு சீர்செய்யப்பட்டுள்ளது.தங்க சாலை மேம்பாலத்துக்கு கீழுள்ள காலி இடத்தில் 9 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. என்னை வெற்றி பெற செய்தால், தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தடையின்றி செய்து தருவேன். தங்கசாலை பகுதியில் நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம் கட்டி திறந்து வைத்துள்ளேன். இதேபோல், தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவர முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை வெற்றி பெற்றதும் தொகுதி மக்களுக்கு செய்து கொடுப்பேன். தொகுதி மக்களின் பிரச்னையை தீர்ப்பதுதான் எனது முதல்வேலை,’’ இவ்வாறு அவர் பேசினார்….
The post தொகுதிக்கு புதிய திட்டங்கள்: அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் appeared first on Dinakaran.
