×

தமாகா பொதுச்செயலாளர் ஞானசேகரன் விலகல்

சென்னை: தமாகா பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த ஞானசேகரன், திரு.வி.க. நகர் (தனி) தொகுதியில் போட்டியிட கட்சி தலைவர் ஜி.கே.வாசனிடம் விருப்ப மனு அளித்துள்ளார். இது அவரது சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் திரு.வி.க.நகரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது திட்டமிட்ட சதி என அவரது ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், ஞானசேகரன் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தமாகாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

The post தமாகா பொதுச்செயலாளர் ஞானசேகரன் விலகல் appeared first on Dinakaran.

Tags : Tamaka ,general secretary ,Gnanasekaran ,CHENNAI ,V.K. ,GK Vasan ,Nagar ,Separate) ,Dinakaran ,
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...