பேரவையில் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து கூறியதாவது: ஹொளேநரசிபுரா தொகுதியில்48 அரசு பள்ளிக்கூடம் உள்ளன. இந்த 48 பள்ளிக்கூடத்திற்கு 51 ஆங்கில மொழி போதிக்கும் ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 41 ஆங்கில பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றி வருகின்றனர். காலியாக இருந்த 10 ஆசிரியர் பணியிடத்தால் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் பாதிக்கப்படாத வகையில் 3 தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இதுதவிர மற்ற பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக வகுப்புகள் எடுப்பதன் மூலமாக மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த பிப்ரவரி மாதம் 1ம்தேதி ஹொளேநரசிபுராவில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளோம். மாநில கல்வித்துறையில் 3590 பணியிடம் காலியாக இருக்கிறது. இதை நிரப்ப வேண்டும் என்பதற்காக நிதித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம், என்றார்….
The post கல்வித்துறையில் 3,590 பணியிடம் காலியாக இருக்கிறது: அமைச்சர் சுரேஷ்குமார் தகவல் appeared first on Dinakaran.