×

நச்னு நாலு கேள்வி…அதிமுகவின் பணக் கூட்டணி ஒருபோதும் வெல்லாது: சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி

* முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளருக்கு எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். 10 ஆண்டு கால மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு முடிவு ஏற்பட வேண்டும் என்ற எண்ண ஓட்டம் மக்கள் மன்றத்தில் முழுமையாக வியாபித்திருக்கிறது. முதல்வர் பழனிசாமியின் ஆட்சியானது பாஜ கட்சியின் கொத்தடிமை அரசாக செயல்பட்டதை மக்கள் வெறுக்கிறார்கள். எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வேறோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தினார்களோ, அதை போல தமிழனுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக இருக்கிற பாஜவோடு கூட்டணி வைத்துள்ள அதிமுகவை நிச்சயம் வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர். எனவே திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.* முதல்வரை எதிர்த்து களம் இறங்கும் திமுக வேட்பாளர் முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறார். அவரை திமுக எப்படி வெற்றி பெற வைக்கப் போகிறது?திமுக வேட்பாளர்களை பொறுத்தவரை தனிப்பட்ட வேட்பாளர்கள் என்பதை விட ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் முதன் முறையாக போட்டியிட்டாலும் திமுக வலுவாக இருப்பதும், கட்சியின் மக்கள் பணியும், மு.க.ஸ்டாலின் செல்வாக்கும், அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் எடப்பாடியில் போட்டியிடுகிற சம்பத்குமாரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டு விட்டது. எங்களின் திட்டமிட்ட பிரசாரமும், திமுகவினரின் கடுமையான உழைப்பும் நிச்சயம் சம்பத்குமாரை வெற்றியடையச் செய்யும்.* முதல்வர் தொகுதி என்பதால் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதை திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது?கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே அதிமுக பணத்தை நம்பி போட்டியிட்டது. தமிழகம் முழுவதும் தோற்கடிக்கப்பட்டது. அவர்கள் வைத்திருக்கும் பணக் கூட்டணி ஒருபோதும் வெல்லாது. மக்கள் கூட்டணி தான் வெல்லும். வாக்காளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வந்த உடன் அறிவித்த அன்றைக்கே எடப்பாடியில் வீடு வீடாக வேஷ்டி சேலைகள் அதிமுகவினரால் வழங்கப்பட்டது. அதை வாங்கிய மக்கள், ‘எங்களிடத்தில் கொள்ளைடித்த பணம் எங்களிடமே திரும்பி வருகிறது’ என்று தான் பேசினார்கள். பணம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்றால் கடந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. கோடிகளை கொட்டியும் அதிமுக கூட்டணியை மக்கள் நிராகரித்தார்கள். எனவே பணநாயகம் வெல்லாது.* எடப்பாடி தொகுதியில் முதல்வருக்கு எதிரான எதிர்ப்பலைகள் என்று எதை நினைக்கிறீர்கள்?இந்த தொகுதியில் ஏழை நெசவாளர்களும், விவசாயிகளும் பிரதானமாக இருக்கக் கூடிய தொகுதி. கொரோனா காலத்தில் பல்வேறு தடைகளினால் வேலை இழந்து கஷ்டப்பட்ட காலத்தில் அவர்களுடைய கஷ்டங்களிலே முதல்வர் பங்கு பெறவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்குள் முழுமையாக வியாபித்திருக்கிறது. இந்த தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் பேர் முடங்கி கிடக்கிறார்கள். இங்கு வளர்ந்தவர்கள் முதல்வரும், அவரை சார்ந்த ஒரு சில ஆளுங்கட்சியினர் மட்டும் தான். பள்ளி மாணவர்கள் வந்து செல்லும் இடத்தில் டாஸ்மாக் கடை. இப்படி ஒரு கொடுமையான நிலை தான் இங்கு இருந்து வருகிறது. ஆகவே இவை அத்தனையும் முதல்வருக்கு எதிராக திரும்பும். அவருக்கு எதிரான இந்த எதிர்ப்பலைகள் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை தரும்….

The post நச்னு நாலு கேள்வி…அதிமுகவின் பணக் கூட்டணி ஒருபோதும் வெல்லாது: சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி appeared first on Dinakaran.

Tags : Nachnu ,Mukha ,Selvakanapathi ,Salem West District ,Djagagam ,Dizhagam ,Edapadi ,CM ,Palanisamy ,Cash Alliance ,Djawakkanapathi ,
× RELATED நச்னு நாலு கேள்வி: கவர்ச்சிகரமான...