×

டெல்லியின் கடுமையான குளிரிலும் ஆதரவற்ற 300 நாய்களை பராமரிப்பதோடு பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார் 80 வயது மூதாட்டி

டெல்லி: டெல்லியில் சாகிர் பகுதியில் உள்ள பாழடைந்த குடிசையில் தெருநாய்களை பராமரித்து வருபவர் பிரதமாதேவி என்ற செல்லப்பிராணி பிரியர். அம்மா என்று அப்பகுதி மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அந்த பெண் 1984ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள நந்தி கிராமத்தில் இருந்து டெல்லிக்கு குடி பெயர்த்தார், தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப காலத்தில் தேநீர் கடை வைத்து பிழைத்து வந்தார். அதன் பின் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கழிவுகளை சேகரிக்கும் பணியையும் செய்தார், நாய்கள் மீது பிரியம் கொண்ட அந்த பெண் நாய்களுக்கு உணவு அளித்து பிராமரிக்கவே சம்பாதிக்க தொடங்கினார். இந்த தள்ளாத வயதிலும் குடிசை ஒன்று அமைத்து நாய்களுடன் வசித்து வருகிறார் பிரதிமாதேவி. 250க்கும் மேற்பட்ட நாய்களை பராமரித்து வரும் நிலையில் தீடீரென முன்னறிவுப்பு இன்றி டெல்லி மாநகராட்சி அவரின் குடிசையை அப்புறப்படுத்தி உள்ளது. இருப்பினும் மனம் தளராத மூதாட்டி, மரத்தின் அடியில் தஞ்சம் அடைந்து தொடர்ந்து நாய்களை பராமரித்து வருகிறார். மூதாட்டிக்கு ஆதரவாக சில தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் சிலரும் ஆதரவு காட்டியுள்ளனர். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கை விசாரித்த டெல்லி நீதி மன்றம் விசாரணை முடியும் வரை மூதாட்டிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. …

The post டெல்லியின் கடுமையான குளிரிலும் ஆதரவற்ற 300 நாய்களை பராமரிப்பதோடு பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார் 80 வயது மூதாட்டி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Prathamadevi ,Sakhir ,
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...