×

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்: அதிபர் ஜோ பைடன் உத்தரவு

வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் மீண்டும் நியமனம் செய்தார். அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்ற பின்னர் நிர்வாக ரீதியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரும் தற்போது புதிதாக நியமிக்க ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தூதர் பதவிக்கு எரிக் கார்சேட்டியை (50) அதிபர் ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளார். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மேயராகவும், 12 ஆண்டுகளாக நகர மேம்பாட்டுக் குழுவில் இருக்கும் எரிக் கார்செட்டி கடந்த ஆண்டு இந்தியாவுக்கான தூதராக பரிசீலனையில் இருந்தார். எரிக் கார்செட்டியின் பெயர் ஓராண்டுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது நியமனம் செய்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவராக இருந்த கென்னெத் ஜஸ்டரின் பதவிக்கு 50 வயதுடைய எரிக் கார்செட்டி அமர்த்தப்பட்டுள்ளார்….

The post இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்: அதிபர் ஜோ பைடன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Eric Carcetti ,US ,India ,Chancellor ,Joe Byden ,WASHINGTON ,Joe Biden ,Eric Carcetty ,New President ,United States ,President ,Joe Bidon ,Dinakaran ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது