×

கொரோனா வைரஸ் தாக்குதலின் 2வது அலையை தடுக்க வேண்டும்: மாநிலங்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்திருப்பது குறித்து மாநில முதல்வர்களிடம் கவலை தெரிவித்த பிரதமர் மோடி,  விரைவான நடவடிக்கைகள் மூலம் 2ம் அலை உருவாவதை தடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார். கடந்த சில மாதங்களாக க கட்டுப்படுத்தப்பட்டு  இருந்த கொரோனா வைரஸ் தாக்குதல்,  சமீப நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நடந்தாலும்,  தினசரி வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இது பற்றி அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று வீடியோ  கான்பரன்சிங்கில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற  மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை அளிக்கிறது. நாடு முழுவதும் சுமார் 70 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதை இப்போதே கட்டுப்படுத்தாவிட்டால், நாடு  முழுவதும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். தொற்று நோயை எதிர்த்து போரிடுவதில் இந்தியா கொண்டுள்ள நம்பிக்கையானது, அதீத நம்பிக்கையாகி  விடக் கூடாது. எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகரித்தல், கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல் மற்றும் தடுப்பூசி  போடுதலை விரைவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மாநில முதல்வர்கள் எடுக்க வேண்டும். மக்களை பீதிக்கு உள்ளாக்காமல், அதே சமயம்  அவர்களை இப்பாதிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதித்தல், கண்காணித்தல், சிகிச்சை அளித்தலை தீவிரமாக்க வேண்டும். கொரோனா 2ம் அலை உருவாகும் நிலையில் அதனை தடுக்க விரைவான, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறு கட்டுப்பாடு  மண்டலங்களை உருவாக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம், பெரும்பாலும் கிராமங்கள்  பாதிக்கப்படாமல் இருந்ததே. ஆனால், தற்போது சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வைரஸ் தொற்று பரவுகிறது. எனவே, சிறு நகரங்களிலும்  பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். அங்கும் கவனம் செலுத்த வேண்டும். ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் கொரோனாவை வைரஸ்  நம்மால் விரட்ட முடியும். கொரோனாவுக்கு எதிராக வலுவாக போரிடுவதில் உலகிற்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. நமது நாட்டின்  குணமடைந்தோர் விகிதம் 96 சதவீதமாகும். பலி எண்ணிக்கையும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிக மிக குறைவாகும். இவ்வாறு அவர் பேசினார்.தடுப்பூசியை வீணாக்காதீர்கள்முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனையின்ேபாது, கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படுவது குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.  தற்போது, 10 பேருக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்து ஒரே பாட்டிலில் அடைத்து அனுப்பப்படுகிறது. இந்த மருந்தை திறந்தால் மூன்று மணி  நேரத்துக்குள் பயன்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் அது காலாவதி ஆகிவிடும். சில மாநிலங்களில் குறைவானோர் மட்டுமே தடுப்பூசி போட  வரும்போது தடுப்பூசி மருந்துகள் அதற்குள் காலாவதியாகி வீணாகி விடுகின்றன. எனவே, தடுப்பூசி போடுதலை மாநில அரசுகள் தினசரி கண்காணிக்க  வேண்டும், தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் பலிபாஜ கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திலீப் காந்திக்கு (69) கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி  செய்யப்பட்டது. உடனடியாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கும் வென்டிலேட்டர் சுவாசக் கருவியுடன் சிகிச்சை  அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். கடந்த 2003ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜ ஆட்சியில் கப்பல்  துறை இணை அமைச்சராக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பாஜ தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

The post கொரோனா வைரஸ் தாக்குதலின் 2வது அலையை தடுக்க வேண்டும்: மாநிலங்களுக்கு பிரதமர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PM ,2nd wave of coronavirus attack ,New Delhi ,Modi ,
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...