சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பஸ்கள், விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடுவதில் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், வெளியூர்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி, வரும் 24ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் ஏற்கனவே அரசு பஸ்கள், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், அரசு பஸ்களில் டிக்கெட் இல்லாதவர்கள் ஆம்னி பஸ்களை நாடுகின்றனர். இதனால்,கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துக்கு வழக்கமாக ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. ஏ.சி. செமி சிலீப்பருக்கு. ஒரு சில பேருந்துகளில் ரூ.3,500, ரூ.4000ம் வசூலிக்கிப்படுகிறது.தூத்துக்குடிக்கு ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு ஏசி சிலீப்பர் பேருந்துக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சில பேருந்துகளில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது. ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.2,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,800, ரூ.2000 கட்டணம் வசூலிக்கிப்படுகிறது. சனிக்கிழமையிலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஇதுபோல, விமான டிக்கெட் கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக 5,300 ரூபாய். தற்போது ரூ.13,000 முதல் ரூ.14,500 வரை அதிகரித்துள்ளது. மதுரைக்கு ரூ.3,600 இருந்தது. தற்போது ரூ.12000 முதல் ரூ.14,000 வரை உள்ளது. கோவைக்கு ரூ.3,500 இருந்தது. தற்போது ரூ.8,000 முதல் ரூ.13,500 வரை அதிகரித்துள்ளது. திருச்சிக்கு ரூ.3,500 கட்டணம் இருந்தது. தற்போது ரூ.6,500 முதல் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. கொச்சிக்கு ரூ.3,500 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.10,000 முதல் ரூ.19,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திற்கு ரூ.5,150ல் இருந்து ரூ.12,000 முதல்ரூ.21,000 வரை அதிகரித்துள்ளது. விமான கட்டணம் ராக்கெட்போல் உயர்ந்தாலும் பண்டிகை கொண்டாடவேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் முன் பதிவு செய்து வருகின்றனர்….
The post கிறிஸ்துமஸ், புத்தாண்டுதொடர் விடுமுறை; ஆம்னி பஸ், விமான கட்டணம் உயர்வு: மதுரை ரூ.12,000 கொச்சி ரூ.19.500 appeared first on Dinakaran.
