×

அடுத்த 5 ஆண்டுகளில் 14 நமீபியா சிறுத்தைகள் வருது: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘சமீபத்தில், நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு  கொண்டு வரப்பட்டு எட்டு சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில்  விடப்பட்டன. இதில் 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கும். தற்போது 8 சிறுத்தைகளும் வனப்பகுதியில் வேட்டையாடத் தொடங்கியுள்ளன. அவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இதற்காக நமீபியா அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வரும் திட்டத்திற்காக ரூ .38.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்….

The post அடுத்த 5 ஆண்டுகளில் 14 நமீபியா சிறுத்தைகள் வருது: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,New Delhi ,Union Environment ,Minister ,Aswini Kumar Sawube ,Parliament ,Namibiya ,India ,Dinakaran ,
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு