×

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது: மருத்துவ நிபுணர்கள் கருத்து

சென்னை : சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் பி.எப்.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பி.எப்.7 மற்றும் பி.எப்.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத் மாநிலம் வதோகரா மற்றும் அகமதாபாத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவில் மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஓமிக்ரான் BF.7 வகை கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ நிபுணர் ராமசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என்றும், தடுப்பூசி போட்டவர்களுக்கு புதிய வகை கொரோனா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் மருத்துவ நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், வழக்கமான கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றினாலே புதிய வகை கொரோனா பரவலை தடுத்துவிடலாம் என்று அவர் தெரிவித்தார். சீனாவை மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா பரவும் நாடுகளில் இருந்து சென்னை வருவோரை கண்டறிந்து அவர்களை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், அறிகுறி இருந்தால் வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார். …

The post புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது: மருத்துவ நிபுணர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,China ,India ,
× RELATED சொல்லிட்டாங்க…