- பேராசிரியர் அன்பாஜகன் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி
- சென்னை அண்ணா கொன்வாலயம்
- முதல்வர் G.K ஸ்டாலின்
- சென்னை
- அன்பாஜகன் நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சி
- சென்னை அண்ணா நாவலயம்
- முதல் அமைச்சர்
- நியூயார்க் செஞ்சுரி ஒளிப்படக் கண்காட்சி
- கெ ஸ்டாலின்
- சென்னை அண்ணா கன்வாலயம் பேராசிரியர் அன்பாஜகன் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி
- செ.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், பேராசிரியர் அன்பழகனின் இளமைக்கால புகைப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள், பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உள்ள புகைப்படங்கள், பேராசிரியர் அன்பழகன் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் பேராசிரியரின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். நிகழ்ச்சியில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எம்பி, எம்எல்ஏக்கள், பேராசிரியர் அன்பழகனின் மகன் அ.அன்புச்செல்வன், பேரனும் எம்எல்ஏவுமான அ.வெற்றியழகன், புகைப்படக் கண்காட்சி ஏற்பாட்டாளர் கோவை சுப்பு மற்றும் பேராசிரியரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்….
The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார் appeared first on Dinakaran.