×

திமுக ஆட்சியில் ஆவின் பொருட்கள் விற்பனை உயர்வு: அமைச்சர் நாசர் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பூந்தமல்லி: திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என் திருமண மண்டபத்தில் இன்று காலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரின் பேத்தியுமான ஆவடி எஸ்எம்என்.ரசூல் மகளுமான கே.ஷெரின் கௌசியா மற்றும் வடபழனி, கங்கை அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசைன்-ஷகிலா பர்வின் தம்பதியரின் மகன் ஜா.கலீல் இப்ராஹிம் ஆகியோரின் திருமணம் இன்று காலை 10 மணியளவில் திருவேற்காடு, ஜி.பி.என் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண மண்டபத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவுவாயில், பிரமாண்ட மேடையும், வழிநெடுகிலும் மக்களை பாதிக்காத வகையில் வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, மணமக்களிடம் மாலைகளை வழங்கி அணிவிக்க செய்தார். பின்னர் திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினும் மணமக்களை வாழ்த்தினர். பின்னர் மணமக்களை வாழ்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;நான் திமுக இளைஞரணி செயலாளராக இருந்தபோது தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்தபோது ஆவடி நாசரும் உடனிருப்பார். அவரிடம் ஒரு பொறுப்பை கொடுத்தால், அதில் முழுமையாக ஈடுபட்டு வெற்றிகரமாக செய்து முடிப்பார். எதையும் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடத்தக்கூடியவர். இத்திருமணத்துக்கு தேதி கொடுத்ததும், நான் வருவதால் எங்கே திருமணத்தை ஆடம்பரமாக நடத்திவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது. எங்காவது தப்பு நடந்தால், அதை செல்போனில் படம்பிடித்து பலர் சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். என்னை பற்றி விமர்சனம் வந்தால் பரவாயில்லை, நாசருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால் அமைதியாக, ஆடம்பரமின்றி திருமணத்தை நடத்த வேண்டும். பேனர், கட்-அவுட் வைக்கக்கூடாது. கட்சிக் கொடிகள், தோரணங்கள் மட்டுமே கட்டியிருக்க வேண்டும் என நாசரிடம் வலியுறுத்தினேன். அதன்படி, அவர் எனது கட்டளையை நிறைவேற்றியுள்ளார். மேலும், பால்வளத்துறையை பாராட்டத்தக்க அளவில் சிறப்பாக நடத்தி வருகிறார். பால்விலை குறைப்பின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர். ஆவின் நிறுவனத்தில் கடந்த தீபாவளி தினத்தில் நெய் விற்பனை அதிகரித்தது. தற்போது கிறிஸ்துமஸ் தினத்துக்கு புதிய இனிப்பு வகைகள், 12 வகையான கேக் வகைகளை ஆவினில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.கடந்த அதிமுக ஆட்சியில் ₹55 கோடி அளவில் மட்டுமே ஆவினில் பால் உற்பத்தியானது. நான் ஆட்சி பொறுப்பேற்றதும், தீபாவளியின்போது ₹35 கோடிக்கு பால் உற்பத்தி பொருட்கள் விற்பனையாகி இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் ₹114 கோடி அளவுக்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பால்பொருட்களின் விற்பனை அதிகரிப்புக்கு நான் முதல்வர் என்பதால் அல்ல. பால்வளத்துறை அமைச்சராக நாசர் இருப்பதால்தான். அவரது முயற்சியில் ஆவின் பால் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட அனைத்து வகைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என ஆங்கில பத்திரிகையின் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. நம்பர் 1 முதல்வர் என சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதைவிட நம்பர் 1 மாநிலமாக தமிழகம் வரவேண்டும் என விரும்பினேன். அதன்படியே, தமிழகம் நம்பர் 1 மாநிலமாக அறிவித்துள்ளனர். இந்த நம்பர் 1 சாதனைக்கு அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளின் கூட்டுமுயற்சிதான் காரணம். வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டர்களாக மணமக்கள் விளங்கி, அனைத்து வளங்களும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.திருமணத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, காந்தி, ராமச்சந்திரன், மெய்யநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், கணேசன், கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, மு.க.தமிழரசு, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கே.ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.மாவட்ட செயலாளர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்எல்ஏ, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, இஏபி.சிவாஜி, எல்லாபுரம் பி.ஜெ.மூர்த்தி, திருத்தணி எம்.பூபதி, கே.ஜெ.ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜே.ரமேஷ், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், சி.ஜெரால்டு, மா.ராஜி, காயத்ரி தரன், தொழுவூர் பா.நரேஷ் குமார் பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர், ஒன்றிய, நகர செயலாளர்கள் டி.தேசிங்கு, ப.ச.கமலேஷ் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், சே.பிரேம் ஆனந்த், டி.ராமகிருஷ்ணன், தங்கம் முரளி, ஜி.ஆர்.திருமலை, தி.வை.ரவி, தி.வே.முனுசாமி, கி.வே.ஆனந்தகுமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணை பெருந்தலைவர்கள் எம்.பர்கத்துல்லாகான், பரமேஸ்வரி கந்தன், மாவட்ட பிரதிநிதி ஜெ.சுதாகர், பேரூராட்சி தலைவர் உ.வடிவேல், ஈக்காடு கே.முஹம்மது ரஃபி, வெள்ளவேடு கே.கோபிநாத், திருவேற்காடு நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான என்இகே.மூர்த்தி, ஆவடி மாநகர செயலாளர் ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார்,  வழக்கறிஞர் கு.சேகர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். பகுதி செயலாளர் ஜி.ராஜேந்திரன், பொன்விஜயன், நாராயணபிரசாத், பேபி சேகர், மண்டல குழு தலைவர்கள் ஜோதிலட்சுமி, நாராயணபிரசாத், வி.அம்மு, அமுதா பேபி சேகர், க.மு.ஜான், மாமன்ற உறுப்பினர்கள் பைரவி ஜான், ஜி.ராஜேஷ்குமார், அ.வீரபாண்டியன், எஸ்.செல்வம், பி.வெங்கடேசன், வட்டச் செயலாளர்கள் சு.பன்னீர்செல்வம், டி.வி.ரவிக்குமார், க.சக்திவேல், சத்யா கோ.ரவி, ஆவடி பாலா, திருவேற்காடு நகர இளைஞரணி அமைப்பாளர், நகர மன்ற உறுப்பினர் எஸ்.சங்கர், நகரமன்ற தலைவர் உஷாராணி ரவி, துணைத் தலைவர் சரளா நாகராஜி உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்….

The post திமுக ஆட்சியில் ஆவின் பொருட்கள் விற்பனை உயர்வு: அமைச்சர் நாசர் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin ,Minister Nasser ,Poontamalli ,Tamil Nadu ,Dairy ,Minister ,S.M. Nassar ,GPN ,Tiruvekkad ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்...