×

காவி நிறத்தில் பிகினி காட்சிகள்; ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்கு: ஜன. 3ம் தேதி விசாரணை

பாட்னா: காவி நிறத்தில் பிகினி காட்சிகளில் நடித்த ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வரும் ஜன. 3ம் தேதி இவ்வழக்க விசாரணைக்கு வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் – நடிகை தீபிகா படுகோன் நடித்த ‘பதான்’ திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றில், காவி நிறத்தில் பிகினி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, நடிகர் ஷாருக் கான், நடிகை தீபிகா  படுகோன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும்,  ஆபாச காட்சிகளை பரப்பியதாகவும் கூறி, தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 3ம் தேதி விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்தார்….

The post காவி நிறத்தில் பிகினி காட்சிகள்; ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்கு: ஜன. 3ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Shah Rukkan ,Dipika Patugon ,Shah Rukhan ,Bihar ,Deepika Padukone ,Deepika Patugon ,Dinakaran ,
× RELATED திடீர் உடல்நலக்குறைவு ஷாருக்கான் அட்மிட்