×

ரூ.14,000 லஞ்சம்: சர்வேயர் கைது

வருசநாடு: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் ராமேந்திரன் (34). விவசாயியான இவர் தனது 1.47 ஏக்கர் நிலத்தை உட்பிரிவு செய்ய மயிலாடும்பாறை சர்வேயர் செல்வரங்கனை அணுகினார். அதற்கு ரூ.14 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தருவதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ராமேந்திரன் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 14,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர். மயிலாடும்பாறை குறுவட்ட அலுவலகத்தில் அந்த பணத்தை சர்வேயர் செல்வரங்கனிடம் கொடுக்க நேற்று ராமேந்திரன் சென்றார். அப்போது, அலுவலக உதவியாளர் வீரபாண்டி (32), சர்வேயரிடம் கொடுப்பதாக கூறி பணத்தை வாங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், செல்வரங்கன் மற்றும் வீரபாண்டியை கைது செய்தனர்….

The post ரூ.14,000 லஞ்சம்: சர்வேயர் கைது appeared first on Dinakaran.

Tags : Varasanadu ,Ramendran ,Gumanandolu ,Mayiladumpara, Theni District ,Dinakaran ,
× RELATED வருசநாடு பகுதியில் நெடுஞ்சாலை மையக்கோடு அமைக்கும் பணி தீவிரம்